நன்றி:- கேப்பியார் இதழ்
| இடமிருந்து அப்துல் காதர்,அ.மார்க்ஸ்,மு.சிவகுருநாதன்,பா.ரவிக்குமார்,த.பிரிட்டோ |
18 May
பன்மை கல்வியியல், செய்திகள், செய்திகள் – குறிப்புகள் – கருத்துகள்
17 May
பன்மை செய்திகள், நிகழ்வுகள், நூல் விமர்சனம், பதிவுகள்
அவர்மேலும்பேசியதாவது:
பேச: 98940 54640
24 Apr
பன்மை கல்வியியல், குற்றம், செய்திகள், செய்திகள் – குறிப்புகள் – கருத்துகள்

இந்த வகையில் பத்தாம் வகுப்பு கணித வினாத்தாளுக்குரிய விடைகள்
நகலெடுக்கப்பட்டு (XEROX) விநியோகிக்கப்பட்ட நிகழ்வு திருவண்ணாமலை
மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (இந்த மெட்ரிக்
முகமூடியை எப்போது கழற்றுவார்கள் என்று தெரியவில்லை) நடந்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் குறுஞ்செய்தி மூலம் விடைகளை அனுப்பிப் பெற்றளித்த ஆசிரியர் அறைக் கண்காணிப்புப் பணியிலிருந்து
விடுவிக்கப்பட்டார். அவர் அடுத்த தேர்வில் வேறு மாற்று வழியை
அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் அடிக்கடி வினாத்தாளகள் முன்கூட்டியே நகலெடுத்து விற்பனை செய்யப்படுகின்றன. வினாத்தாள் முன் கூட்டியே வெளியாவது, தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவது போன்றவற்றை ஒழிக்க முடியாது என்று சொல்வதற்கில்லை. அதிகாரவர்க்கம் இவற்றின் மூலம் பெரும் பயனடைகிறது என்பதே உண்மை. தேர்தல் முறைகேடுகளைப் போல தேர்வு முறைகேடுகளும் ஒருவர் மற்றவரைக் குறை சொல்வதற்கு பயன்படுத்துவார்களே தவிர எந்தத் தரப்பும் அவற்றில் ஈடுபடாமலிருப்பது இல்லை.
ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியர் தனக்கு வந்த மின்னஞ்சல் புகாரை
புறக்கணிக்காமல் மேற்கொண்ட நடவடிக்கையால் இந்நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பள்ளி அலுவலகத்திலேயே விடைகள் நகலெடுக்கப்பட்டது. அறைக் கண்காணிப்பாளர்களிடம் விடைத் துண்டுகள் இருந்தது, செல்போன் மூலம் தேர்வின் போது உரையாடியது, அவர்களின் சட்டைப்பையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கவர் பணம் போன்றவை ஊடகத்தின் பார்வைக்கு வந்துள்ளன. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் இதைப் போல செயல்பட்டால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் பிடிபடும் என்பதில் அய்யமில்லை.
அடிக்கடி மறதி நோய்க்காட்படும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் இதே
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2008-ல் நடந்த நிகழ்வை நினைவுப்படுத்துவது மிகப் பொருத்தமாக இருக்கும். முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு நடத்திவரும் ஜீவா – வேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இவ்விதம் முறைகேடுகளில் ஈடுபட்டு 100/100 தேர்ச்சி விழுக்காட்டைப் பெற்றுவந்த நிலையில் 2008 மார்ச் பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கந்தசாமி, நேர்முக உதவியாளர் சக்கரபாணி, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பரசுராமன், ஆரணி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர் பரிமளா ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தேர்ச்சி விழுக்காடு 67% ஆகக் குறைந்தது.
இத்தகைய நிகழ்வுகள் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் யோசிக்க வேண்டும். 28.02.2009 அன்று விழுப்புரத்தில் கூடிய மக்கள் கல்வி கூட்டமைப்பு காப்பியடிக்கும் கலாச்சாரத்தை ஒழித்துக் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இந்த மாதிரி நிகழ்வுகள் ஏற்படும் போது அனைவரும் வாய்க்கு வந்தபடி
கருத்துக்களை உதிர்ப்பது வாடிக்கையாகி விடுகிறது. 18.04.2012 அன்று
தினமணி தலையங்கம் இம்முறைகேடுகளுக்குக் காரணம் அரசுப் பள்ளிகள் என்று சொல்கிறது. இந்த தனியார் பள்ளியில் காப்பியடிக்கத் துணை போனவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றும், அவர்கள் பள்ளிக்கே வராமல் மாணவர்களுக்குத் தேர்ச்சி அளிக்க இம்மாதிரியான முறைகேடுகளுக்குத் துணை போவதாகவும் கண்டுபிடித்துள்ளது.
முறைகேடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்களைக் கண்டிக்க வேண்டியது நடுநிலையாளர்களின் கடமை. அதற்கு இவர்கள்தான் காரணம் என்று முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது. மனிதன் தவறு செய்வது வாடிக்கையானது. அந்த தவற்றைச் செய்யத் தூண்டுபவர்களை கண்டு கொள்ளாமல் விடுவது சரியா?
மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பார்வையிடலின் போது அப்பள்ளி அலுவலகத்திலேயே விடைகள் நகல் எடுக்கப்பட்டது, வகுப்பறையில் அறைக் கண்காணிப்பாளர்கள் பையில் பணம், கத்தை கத்தையாக விடைத் துண்டுகள், அவர்களிடையேயான செல்போன் உரையாடல்கள் ஆகியவை நடந்து பலர் கையும களவுமாக பிடிபட்ட போது இங்கு என்னவிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது?
அந்தத் தனியார் பள்ளி அலுவலர்கள் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் தொடர்ந்து பணிபுரிந்தனர். அறைக் கண்காணிப்பாளர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைக்கு ஆணையிடப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
இந்த 7 பேரின் நடத்தை மிக இழிவானது. இதற்குரிய தண்டனை அளிக்கப்பட்டாக வேண்டும். ஆனால் இதற்கு உதவி புரிந்த அப்பள்ளி நிர்வாகம், அலுவலர்கள், கல்வி அதிகாரிகள், அலுவர்கள், துறை அலுவலர்கள், பறக்கும் படையினர் என அனைத்துத் தரப்பினரும் உரிய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு என்ன நடக்கும்? கூடிய விரைவில் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார் என்பதை மட்டும் இப்போது அனுமானிக்கலாம்.
மாவட்டக் கல்வி அலுவலகம் தேர்வுப் பணிக்கு ஆசிரியர்களை நியமிக்கிறது. பல தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் இவர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது. அப்பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு துறை அலுவலர், அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உள்ளிட்டவர்கள் நியமிக்கப்படுகின்றர். தேர்வு நடைபெறும் காலங்களில் அவர்களுக்கு நல்ல கவனிப்பு செய்யப்படுகிறது. தேநீர், வடை அளித்தாலே மாணவர்கள் காப்பியடிப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கும் ஆசிரியர்களும் இருக்கத்தான்செய்கிறார்கள். நேர்மையாக செயல்படும் ஒரு சிலரும் நமக்கேன் வீண் வம்பு என்று நினைத்து பேசா மடந்தையாகி விடுகின்றனர். அம்மணமாக இருக்கும் ஊரில் கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரன் என்ற நிலைதான் இவர்களுக்கு.
அரசுத் தேர்வு முறைகேடுகளுக்கு கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை
உள்ள அனைத்து வகையான அலுவலர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி
நிர்வாகங்கள், தனிப்பயிற்சி நடத்துவோர் (Private Tuition Centres), அரசியல்வாதிகள், உள்ளூர் பெரும் பணக்காரர்கள் என்று பல்வேறு
தரப்பினருக்கும் இதில் பங்குண்டு. இதில் ஏதேனும் ஒரு தரப்பை மட்டும்
குறை சொல்லி தப்பித்துக் கொள்வது இம்முறைகேடுகள் ஆண்டுதோறும் தொடர்வதை ஊக்குவிப்பதாகும்.
மாவட்ட ஆட்சியர் இம்முறைகேட்டை கையும் களவுமாக பிடிக்கும்போதே அவர்கள் ஏன் கைது செய்யவில்லை? கிராம நிர்வாக அலுவலர் ரூ. 100/- பெற்றாலே கைது செய்பவர்கள், இம்முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மட்டும் துறைரீதியான நடவடிக்கைகள், விடுப்பில் செல்ல பரிந்துரைத்தல் என்ற மயிலிறகு சீண்டல்கள் ஏனென்று தெரியவில்லை. புதுச்சேரி கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதற்கு தமிழக காவல்துறை பல மாதங்கள் தேடியதே…. ஆனால் கையும் களவுமாக பிடித்த போது ஏன் கைது நடவடிக்கை இல்லை? இதன் மூலம் பலரைக் காப்பாற்ற மாவட்ட ஆட்சியர் கைகள் கட்டப்பட்டிருப்பது
புலனாகிறது.
யாரும் செயல்படுத்தப் போவதில்லை என்றாலும் வழக்கமான நமது பரிந்துரைகளை கீழே தருகிறேன்.
01. தேர்வில் காப்பியடிக்க உதவும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள்
போன்றவர்களுக்கு துறை ரீதியான தண்டனைகளைத் தவிர்த்து பணிக்காலம்
முழுமைக்கும் தேர்வுப் பணிக்கு லாயக்கற்றவர்கள் என்று அறிவிக்கலாம்.
இதைப் போலவே விடைத்தாள் திருத்தும் பணியில் முறைகேடு செய்பவர்களை பணிக்காலம் முழுமையும் திருத்தும் பணியிலிருந்து விடுவிக்கலாம். தேர்தல் பணிகளில் முறைகேடு செய்பவர்களை பணிக்காலம் முழுமைக்கும் தேர்தல் பணியாற்ற தடை விதிக்கலாம்.
02. முறைகேடுகளில் ஈடுபடும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்தல்.
பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு மாற்றுப் பள்ளிகளில் சேர்க்க
வாய்ப்பில்லை என்றால் குறைந்தபட்சம் தேர்வு மையத்தையாவது ரத்த செய்ய வேண்டும்.
03. இப்போது பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் முதன்மைக் கண்காணிப்பாளராக வேறு பள்ளியின் தலைமையாசிரியர் நியமனம் செய்யப்படுகிறார். இது பத்தாம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து அரசு பொதுத்தேர்விற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
04. ஒரு பள்ளியில் தேர்வு நடக்கும்போது அப்பள்ளியின் தாளாளர்,
தலைமையாசிரியர், ஆசிரியர்கள், எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் யாரும் அங்கு பணியில் இருக்கக் கூடாது என்ற நிலை வேண்டும்.
05. ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு சில குறிப்பிட்ட நபர்களையே தேர்வுப்
பணிக்கு அமர்த்துவதை கண்காணித்துத் தடை செய்ய வேண்டும்.
06. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து ஆசிரியரல்லாத பறக்கும் படை
உருவாக்கப்பட வேண்டும். 100% தேர்ச்சி காட்டும் பள்ளிகள் தனிக்
கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.
07. பள்ளித் தேர்ச்சி 100% எனக்காட்டுவதற்கும் சில குறிப்பிட்ட
பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுப்பதற்கு தனிப்பட்ட மாணவர்களுக்கு சில
கல்வித் தொழிலகங்கள் (?!) உதவி புரிகின்றன. இவற்றையும் தடுக்க வேண்டும்.
08. தேர்வறைகளில் செல்போன் முற்றிலும் தடை செய்யப்பட்டு, வெப் கேமரா
பொருத்தப்பட வேண்டும்.
09. பன்னிரண்டாம் வகுப்பு கணினித் தேர்வு போல ஒரு மதிப்பெண்
வினாக்களுக்கு OMR தாள்கள் மூலம் பதிலளித்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மாணவர்களிடமிருந்து விடைத்தாளை திரும்பப் பெறலாம்.
10. தொடக்கக் கல்வியை சீர்படுத்தாமல் 10, 12 வகுப்புக்களில் முழுத்
தேர்ச்சி பெற வேண்டுமென அரசுப் பள்ளிகளுக்கு அரசும் அரசு அதிகாரிகளும்
கெடுபிடிகள் செய்வது நிறுத்தப்பட வேண்டும். அரசுப் பள்ளித் தேர்ச்சியை
தனியார் பள்ளியுடன் ஒப்பிடும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். அரசு,
அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊடகங்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் மாணவர்கள் மீது தொடுக்கும் தேர்வுகள் தொடர்பான உளவியல் தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும்.
தேர்தல் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறும் போது ஆசிரியர் அல்லாத பிற துறைப் பணியாளர்களைக் கொண்டு தேர்தல் நடத்துவது, வெளி மாநில போலீசாரைப் பயன்படுத்துவது, ராணுவம் அல்லது துணை ராணுவத்தைப் பயன்படுத்துவது என்றெல்லாம் கோரிக்கை வைக்கப்படுவதைப் போல இங்கும் தேர்வுப் பணிகளை ஆசிரியர்களைத் தவிர்த்துப் பிற துறை பணியாளர்களை வைத்து அரசுத் தேர்வுகளை நடத்தலாம் என்றொரு யோசனையும் முன் வைக்கப்பட வாய்ப்பு
உண்டு. ஆனால் அது இன்னும் பல்வேறு மோசடிகளுக்கு வழி வகுக்கும் என்பதில் அய்யமில்லை.
பல வேலைகள் செய்வதை விட கீழ்க்கண்ட இரண்டில் ஏதேனும் ஒன்று செய்தாலே இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
* இப்போதுள்ள மனப்பாடத் தேர்வு முறையை முற்றிலும் ஒழித்து
மேம்படுத்தப்பட்ட புதிய தேர்வு முறையை அமல் செய்தல்
தமிழர்களின் கெட்ட காலம், மாற்று இதழுக்கு வேறு வழியின்றி தினமணியை வாங்கிப் படித்தாக வேண்டிய கட்டாயம். அதற்காக தினமணியை நம்பகமான நாளிதழ் என்று யாரும் தவறாக நினைத்து விட வேண்டாம். பார்ப்பன தினமலரின் அசிங்கங்களை ஒப்பிடும்போது தினமணி தேவலாம் என்கிற நிலைதான்.
எக்ஸ்பிரஸ் – தினமணி குழுமம் இரு நாளிதழ்களுக்கும் சேர்த்து சலுகை ஆண்டு சந்தா என சென்ற ஆண்டு ரூ. 650 என்று நிர்ணயம் செய்திருந்தது. இவ்வாண்டு ரூ. 950 என சற்று உயர்த்தப்பட்டுள்ளது. இது தினமணி வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ள சேதிதான். ஆனால் இவ்வாறு என்னைப் போல ஆண்டு சந்தா செலுத்தியவர்களிடம் விசாரித்தால் எக்ஸ்பிரஸ் – தினமணி நிர்வாகம் தனது முகவர்களுக்காக அப்பட்டமான பகற்கொள்ளையில் ஈடுபடுவது வெளிச்சத்திற்கு வரும்.
ஒரு கணம் தினமும் தினமணியின் தலையங்கங்களை புரட்டிப் பாருங்கள். அவை இவ்வளவு சமூக அக்கறையா என்று நம்மையெல்லாம் புல்லரிக்க வைக்கும். தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் நடக்கும் முகவர்களின் ஏமாற்றுப் பித்தலாட்டங்களை கண்டு கொள்ள மறுக்கும் இவர்கள் ஊருக்கு உபதேசம் சொல்வது நகைப்பிற்கிடமானது.
திருவாரூரில் நான் ஆண்டு சந்தா கொடுக்கும்போது அந்த நண்பர் சேவைக் கட்டணம் (Service Charge) கேட்பார்கள் என்றார். அதனால் என்ன? கொடுத்துவிட்டால் போச்சு என்றேன். எவ்வளவு என்று கேட்டதற்கு ரூ. 10 அல்லது ரூ. 20 கொடுத்தால் போதுமென்றார். என்னுடன் சேர்த்து எனது நண்பருக்கும் சந்தா அளித்தேன். மே மாதம் ஒன்றிலிருந்து இதழ்கள் வந்தன. 10 நாட்கள் மட்டும் தொடர்ந்து வந்தது. பிறகு திடீரென்று இதழ்கள் வரவில்லை. மறுநாள் ஏனென்று கேட்கும் போது வரவில்லை என்ற ஒரு வார்த்தைதான் பேப்பர் போடும் பையனிடமிருந்து பதிலாக வரும். ஆனால் வராத நாளன்று தினமணி – எக்ஸ்பிரஸ் இரண்டும் கடைகளில் விற்பனைக்குக் காத்திருக்கும். பணம் கொடுத்து வாங்கியாகவேண்டும். வேறு வழியில்லை.
நமது தொடர்பு விட்டு விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ சில நாட்களில் ஒரு இதழ் மட்டும் நமக்கு பிச்சை போடுவார்கள். சராசரியாக மாதத்தில் 10 நாட்கள் இரு இதழ்களும் 10 நாட்கள் ஏதேனும் ஒன்றும் வராமற்போவது வாடிக்கை.
அன்று தினமணியோ எக்ஸ்பிரசோ படித்தாக வேண்டும் என்று நமக்கு அரிப்பு ஏற்பட்டால் பேருந்து நிலையம் சென்று பணம் கொடுத்து வாங்கிப் படிக்கலாம். பேப்பர் போடுபவரிடம் வரவில்லை என்பதைத் தவிர வேறு எந்த பதிலும் வராது. காலதாமதமாக வந்தால் அடுத்த நாள் கொடுக்கலாமே என்றால் அதுவும் இல்லை.
மாதம் முடிந்த பிறகு சர்வீஸ் சார்ஜ் கேட்ட பேப்பர் போடும் பையனிடம் பேப்பர் போடாத நாட்களின் விவரங்களையும் அதற்குரிய பணத்தில் சேவைக் கட்டணம் போக மீதித் தொகையைத் தருமாறு கேட்டேன். பதிலில்லை. நான் சண்டை போடுவதாக அவர் முகவரிடம் சொல்லியிருக்க வேண்டும்.
இதழ் கிடைக்கவில்லையா போன் செய்யுங்கள் என செல்போன் மற்றும் தரைவழி இணைப்பு எண்களை தினமணியில் கொடுத்திருப்பார்கள். அவர்களுக்குத் தொடர்பு கொண்டு பலமுறை புகார் செய்திருக்கிறேன். கடிதம் எழுதியிருக்கிறேன். தினமணி நிர்வாகத்தின் எக்ஸிகியூட்டிகள் பெயர், முகவரி எல்லாம் கேட்டு விட்டு போடச் சொல்கிறேன் என்பார்கள். மறுபடியும் அதே நிலைதான் நடக்கும்.
ஒரு முறை அவர்கள் சொன்ன செல்போன் எண்ணுக்குப் புகார் செய்து
திரு. வேங்கடராமன் என்பவருடன் பேசியபோது நீங்கள் சர்வீஸ் சார்ஜ் கொடுக்கவில்லை என்றார். எவ்வளவு என்றேன். ரூ. 20 என்றார். தினமும்
ரூ. 1/- வீதம் மாதத்திற்கு ரூ. 30 தருகிறேன். தினமும் பேப்பர் போடச் சொல்லுங்கள் என்றேன். ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை நாட்கள் பேப்பர் போடவில்லையோ அதற்குரிய தொகையை யார் ஈடு செய்வது என்று கேட்டேன். நீங்கள் சண்டையிடுவதாக புகார் உள்ளது என்றார். எந்தக் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேட்டேன். இவ்வாறாக நீண்ட விவாதத்தில் அவர் என்னை சர்வீஸ் சார்ஜ் கொடுக்க வலியுறுத்தினாரே தவிர தினமும் பேப்பர் வரும் என இறுதிவரை உறுதியளிக்கவில்லை.
அப்புறம் கொஞ்ச நாள் இதழ்கள் வந்து கொண்டிருந்தது. சில நாட்கள் இரண்டும் வருவதில்லை. பல மாதங்களாக ஏதேனும் ஒரு இதழை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தனர். நம் தொடர்பு விட்டு விடக் கூடாது என்பதற்காகவும் ஏதோ பிழைத்துப் போகட்டும் என்றும் இருந்திருப்பார்கள் போலும்.
எனக்கு மட்டுமல்ல என் நண்பருக்கும் இதே கதைதான். அவர் சொன்னார்… நமக்காவது பரவாயில்லை. நமது பள்ளிக்கு முழுதாக 100 நாட்கள் கூட இதழ்கள் வரவில்லை. இந்த ஆண்டு போய்த் தொலைந்து போகட்டும். இனிமேல் இவ்வாறு ஏமாற வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்தார். நானும் எனக்குத் தெரிந்து தினமணிக்கு சந்தா கட்டி ஏமாந்தவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் அனைவரும் சொல்வது, தினமும் இதழ்கள் வருவது குதிரைக் கொம்புதான். முகவர்கள் விற்பனையாகாமல் மிச்சமிருந்தால் மட்டுமே நமக்குத் தருவார்கள். நிதர்சனம் இதுதான். சீட்டுக் கம்பெனிகளிடம் பணம் கொடுத்து ஏமாறுவதில்லையா அதுபோலவே இதையும் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
மே 1 (2011) லிருந்து மார்ச் 31 (2012) வரை இந்தப் போராட்டம் 11 மாதங்கள் தொடர்ந்தது. ஏப்ரல் 2012 முதல் இதழை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள். நான் சந்தா கொடுத்த நண்பரிடம் தகவல் தெரிவித்து விட்டு அமைதியானேன்.
இந்நிலையில் 23.04.2012 அன்று எனக்கு அஞ்சலட்டை ஒன்று வந்தது. சந்தா தொடக்கம் 01.05.2011 முடிவு 30.04.2012 – ரூ. 950 செலுத்தி சந்தாவைப் புதுப்பிக்கவும் என்று சொன்னது அந்தக் கடிதம். அதில் அதே செல்போன், போன் எண்கள். இதுதான் கோபத்தைக் கிளறிவிட்டு என்னை இங்கு எழுத வைத்தது.
பத்திரிக்கை நடத்துபவர்கள் விற்பனை முகவர்களுக்கு உரிய கமிஷன் கொடுக்க வேண்டியது நியதி. அது குறைவாக இருந்தால் உயர்த்திக் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக சந்தா என்ற பெயரில் தொகை வசூலித்து அவர்களுக்கு இதழ்களைக் கொடுக்காமல் வெளியில் அந்த பிரதிகளை விற்பனை செய்து வருவாய் பார்ப்பதற்கு தினமணி – எக்ஸ்பிரஸ் நிர்வாகம் தனது விற்பனை முகவர்களுக்கு மறைமுக ஏற்பாடு செய்துள்ளது இதன் மூலம் தெரியவருகிறது. இது மிகப்பெரிய மோசடியாகும். தினமணி இந்த மோசடியை நிறுத்தட்டும். இல்லையென்றால் பம்மாத்து தலையங்கமாவது எழுதாமல் இருக்கட்டும்.
மாதத்திற்கு 10 நாட்களுக்கு மேல் பேப்பர் போடாமல் இருக்கும் முகவர் எதிர்பார்க்கும் சேவைக் கட்டணத்தின் நியாயத்தைப் பேசும் நிர்வாகம் சந்தா கட்டியவருக்கு தினமும் பேப்பர் போக வேண்டிய நியாயத்தைப் பற்றி ஏன் பேச மறுக்கிறது? அரசுப் பள்ளிகளுக்கு போடும் பேப்பர் மூலம் முகவர்கள் பெருங்கொள்ளை அடிக்கின்றனர். நிர்வாகம் கண்டு கொள்ள மறுக்கிறது. அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் (RMSA) இதழ்களுக்கு அளிக்கப்படும் தொகை இவ்வாறு விரயமாவது கூட லஞ்சம் போலத்தான்.